மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

மகாளயம் பட்சம் – Mahalya Patcham.

 
மகாளயம் பட்சம் ஓர் ஜோதிட ஆய்வு.

            இந்துவாக பிறந்தவன் சில கர்மாக்களை சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்று வேதசாஸ்திரங்கள் சொல்கின்றது. மனிதர்களுக்கு அனுகிரகம் செய்பவர்கள் தேவர்கள் மற்றும் பித்ருக்கள். தேவர்களை பண்டிகை காலங்களில் வழிபட்டு ஆசிகளை பெறுகிறோம். இதே போல் பித்ருக்களாகிய நம் முன்னோர்களின் ஆசிகளை பெற தர்ப்பணம், சிரார்த்தம் போன்ற கர்மாக்களை அமாவாசை, மாத பிறப்பு, சிரார்த்த தினம் மற்றும் மகாளயம் பட்சம் நாட்களில் செய்கிறோம்.
                  மகாளயம் என்பது ஆத்மகாரகன் சூரியன், புதன் வீடாகிய கன்னிராசியில் இருக்கும் புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்ச காலமாகும். இந்த 15 நாட்களில் இறந்தவர்கள் அவரவர் சந்ததிகளை பார்க்க பூலோகம் வந்து நமது வீடுகளில் தங்குவதாக ஐதீகம். இந்த மகாளயபட்ச காலங்களில் அவரவர் முன்னோர்கள், தாய், தந்தை இறந்த திதியிலோ அல்லது பரணி நட்சத்திரத்திலோ அல்லது அஷ்டமி திதியிலோ முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தால் அவரவர் குடும்பம் மிகவும் சௌகரியமாக இருக்கும். இது போல் செய்பவர்களுக்கு, பித்ருதோஷங்கள் நீங்கி, குடும்பத்தில் பிள்ளை பிறப்பது, குழந்தைகளுக்கு களத்திர தோஷங்கள் இருந்தாலும் நீங்கி நேரத்தில் திருமணம் முடிவது போன்ற உன்னதமான நல்ல பலன்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.
                      ஜாதகத்தில் ஐந்தாம் இடம் பாதிப்பு அடைந்தால் இதற்கு காரணமாக பித்ரு தோஷம், பித்ருசாபம் என நமது தர்மசாஸ்திரங்களும், ஜோதிட நூல்களும் கூறுகின்றது. ஜென்ம ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் ராகு கேது போன்ற சர்ப்பகிரகங்கள் நின்றால் இது போன்ற தோஷங்கள் மிக கடுமையாகின்றது. இதனால் என்ன தான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும், காலாகாலத்தில் அதாவது அந்தந்த வயதுகளில் நடக்கும் நல்ல நிகழ்ச்சிகளான படிப்பு, திருமணம், குழந்தை பிறப்பு, வீடு வாசல் அமைவது போன்ற நிகழ்வுகள் காலம் தாழ்த்தி நடக்கும், சில நேரங்களில் நடக்காமலும் போகலாம். மாறாக குடும்பத்தில் துர்மரணம், வறுமை, அரசதண்டனை, பெண்கள் சோரம் போகுதல் போன்ற வேதனைதரும் நிகழ்வுகள் சில குடும்பங்களில் நடந்து விடுகின்றது. இப்படிப்பட்ட ஜாதகர்கள் புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்ச காலங்களில் சிரார்த்தம் தர்ப்பணம் போன்ற கர்மாக்களை அனுஷ்டித்தால் திருப்தியான வாழ்க்கைக்கு வேண்டிய ஆசிர்வாதங்களை நமது முன்னோர்கள் நமக்கு அளிப்பார்கள்.
 
 
 
 
 
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
by
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.
Visit more astrology points in our WEB SITE: www.balajothidar.blogspot.in
 

====================================================================================================
 
 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக