மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 27 பிப்ரவரி, 2013

குரு & சுக்ரன் சேர்க்கை ஆபத்தா? (கேள்வி-பதில்-3)



ஜோதிட கேள்வி பதில் - 3      


குரு & சுக்ரன் சேர்க்கை ஆபத்தா?
 
வணக்கம்,
எனது ஜாதகத்தில் ஏழாம் வீட்டு அதிபதி சுக்கிரன் அவர் குரு பகவானுடன் சேர்ந்துள்ளார்
, இதனால் என்ன பலன் என்று தெரிவித்தால்நன்றி உடையவனாவேன்,
பிறந்த திகதி 12-05-63 நேரம் காலை 05.15, இடம் ரட்னபுர, இலங்கை,

கட்டனம் செலுத்த வேன்டுமாயின் விபரங்களை தெரிவிக்கவும்

பெயர்-------------, இலங்கை 


அய்யா வணக்கம்.

உங்கள் மேஷ இலக்கனதிற்கு ஏழாம் அதிபதி 12 இடத்தில இருப்பது ஒரு குறை, இருந்தாலும் சுக்ரன் உச்சம் பெற்று இருப்பது மிக பெரிய சிறப்பு.  மேஷலக்னதிற்கு மராகாதிபத்தியம் சுக்ரன் பெறுவதால் சிறு குறை. இருந்தாலும், மேஷலகனதிற்கு பாக்கிய ஸ்தானத்திபதி குரு மறைந்தாலும் ஆட்சி பெற்றது மிக பெரிய சிறப்பு. உங்களுக்கு நேரிடையாக பலன் கூற வேண்டுமானால், இரண்டு குருமார்கள் தேவ குரு & அசுர குரு சேர்வது உங்கள் மனைவியின் கருத்துகள் முன்னுக்கு பின் முரணாக அமையும். மேலும் சுகம் தருவதற்கு பதில் தர்க்கம் பேசியே நேரம் கழியும். உங்களுக்கும் ஏதோ ஒரு சொல்ல முடிய மனக்குறை இருந்து கொண்டே இருக்கும்.

---------------------------------------------------------------------------------------------------------------------- 
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore-632002.

 

 

சனி, 23 பிப்ரவரி, 2013

ஆறாம் ஆதிபதியின் அட்டகாசம் - Rudeness of Sixth Bhava


 

ஆறாம் ஆதிபதியின் அட்டகாசம்
  



                    இன்றைய நவீன உலகில் மருத்துவம் அதிபயங்கர வளர்ச்சியை பெற்றுவிட்டது. ஒன்றே ஒன்று கடவுள் இன்னும் உள்ளான் என்று மனிதன் தெரிந்து கொள்ள இறந்த மனிதனை மறுபடியும் பழையபடி உயிர் தர இயலவில்லை. வளர்ச்சி பெற்ற மருத்துவ வசதிகள் பல இருந்தாலும், சிறிதாக உடல் நலம் கெட்டாலும் இன்றும் மக்கள் ஜோதிடரை அணுகி வந்துள்ள வியாதியின் நிலைபாட்டினை தெரிந்து கொள்கிறார்கள்.
               
                 அவரவர் ஜாதகத்தில் லக்னம் பெற்ற பலத்தினையும், ஆறாம் அதிபதியின் தன்மையை பொறுத்து வந்துள்ள வியாதி தற்காலிக மானதா இல்லை தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் வருமா என்று அறிய இயலும். நோய்கள் அவரவர் உடம்பு பெற்ற பௌதிக ரசாயன தன்மை மூலம் உடலில் உள்ள செல்களின் அழிவு மற்றும் வளர்ச்சியை பொறுத்து (Metabolism) நோய்கள் வருவதும் போவதுமாக உள்ளது. இந்த தன்மை நாம் பிறந்தவுடன் உள்ள ஜென்ம ஜாதக கிரகங்களை அடிப்படையாக வைத்து அந்தந்த தசா புக்திகளில் நோய்கள் நமது உடலில் வெளிப்படுகிறது. இதையே தான் நவீன மருத்துவ படிப்புகளும் சொல்கிறது.
                 
                 ஜாதகத்தில் ஆறாம் அதிபதி கேந்திரங்களில் அமைந்த விட்டால் நோய் என்பதே பெரும்பாலும் இல்லாமல் போய்விடுகிறது. ஆறாம் இடங்களில் சரப கிரகங்கள் உட்கார்ந்து விட்டால் நோய்களை எதிர்க்கும் வல்லமை வந்து விடும். ஆறாம் அதிபதியின் தசா புக்தி வந்தால் கண்டிப்பாக அந்தந்த கிரகங்களின் காரக துவத்திற்கு ஏற்ப நோய்கள் வரும். இந்த ஆறாம் அதிபதியை பாதகாதிபதி பார்த்தால் நோய் அதிக உபாதை மற்றும் செலவுக்கு பிறகே போகும். இதே ஆறாம் அதிபதியை மாரகாதி பதி நோட்டம் இட்டால் இந்த நோயே அவரது மரணத்திற்கும் காரணமாக அமைந்து விடும்.
                
                  இந்த ஆறாம் அதிபதி ஜீவனாதிபதியை பார்த்துவிட்டால் நோயின் தன்மை முற்றி அவரது வேலையை ராஜினாமா செய்யும் அளவிற்கு செய்து விடும். இதே ஆறாம் அதிபதிக்கு ஏழாம் அதிபதி அல்லது சுக்ரன் தொடர்பு பெற்று விட்டால் கட்டிய மனைவியும் நோய் வந்த பிறகு கண்டுக்காமல் போய்விடுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதே ஆறாம் அதிபதியை லக்னாதிபதி பார்த்து விட்டால் ஜாதகரே அவரது விடா முயற்ச்சியால் நோயிலிருந்து விடுபடுவார். குரு ஆறாம் அதிபதியையோ அல்லது ஆறாம் இடத்தையோ பார்த்து விட்டால் கடவுளின் கருணைக்கு பிறகு நோயிலிருந்து பூரணமாக குணமாகி வெளியில் வந்து விடுவார்.

 
==============================================================================================================
 

வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
ஆக்கம்:
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.
9443540743. Vellore.

==============================================================================================================

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

தன்னம்பிக்கைக்கு வழி என்ன? ( கேள்வி-பதில்-2 )

ஜோதிட கேள்வி பதில்
தன்னம்பிக்கைக்கு வழி என்ன?

அன்புள்ள அய்யாவுக்கு:
என் வாழ்க்கைக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்கள். என் பெயர் xxxxxxxxxxx. நான் மதுரையில் வசிக்கிறேன். எனது பிறந்த தேதி 18/02/1986. ராசி : ரிஷபம். நட்சத்திரம் : மிருகசீரிடம். அய்யா நான் அனைத்து விசியத்திலும் மிகவும் குழப்பத்தில் உள்ளேன். எனக்கு எதிலும் அதிக ஈடுபாடு இல்லை. என்னை மற்றவர்கள் மதிக்கும் அளவுக்கு நான் நடந்து கொள்வது இல்லை வீட்டிலும் கூட. எனக்கு கூச்ச சுபாகம் அதிகம். நான் நல்ல சொல்வேன் தியானம் செய்யலாம் என்று நினைத்தால் கூட ஒரு நிமிடம் கூட முடியவில்லை. என் மனம் ஒரு நிலையில் இல்லை. எனக்கு தன்னம்பிக்கை என்பது துளி கூட இல்லை. என்னை நம்பி என் அப்பா,அம்மா,நண்பர்கள் ஒரு வேலையைகூட கொடுக்க மாட்டார்கள். எனது காதலி என்னை மிகவும் நம்புகிறாள் . ஆனால் என்னை பற்றி அவளுக்கு முழுமையாக தெரியாது. நான் முருகன் மற்றும் பெருமாளை முதல் கடவுள் கும்பிடுகிறேன் . அய்யா நான் வாழ்வில் முன்னேற நான் என்ன செய்ய வேண்டும்
அன்புடன், xxxxxxxx

குறிப்பு : உங்கள் இணையதளத்தில் என் பெயரை குறிப்பிடாமல் ராசி , நட்சத்திரம் மட்டும் குறிப்படாவும்




அன்புடையீர் வணக்கம்.

உங்கள் நட்சத்ரம் ஒரு பெரிய ராஜா க்ரஹா மான செவ்வாய் யின் நட்சத்ரம். மேலும் உங்கள் ரிஷப ராசி எல்லா இன்ப சுகங்களையும் தரும் சுக்ரனின் ராசி. ஆக, உங்கள் நட்சத்ரம் & ராசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சந்திரன் ரிஷப ராசியில் தான் உச்ச பலத்தை அடைகிறான். உங்களுக்குள் மிக ஆதிகமான திறமைகள் உள்ளது. அவைகள் வெளிவர உங்களுக்கு தயக்கமும் குழப்பமும் உள்ளது. இதற்கு காரணம் உங்கள் ராசியை சனி ஏழாவது பார்வையாக பார்க்கிறார். எனவே உங்களுக்கு அடிக்கடி இந்த தயக்கமும் குழப்பமும் வரும். நீங்கள் இதற்கு முக்கியத்துவம் தர வேண்டாம். உங்கள் எதிர் காலம் அதிக பிரகாசமாக அமைய வாய்ப்பு உள்ளது. பெரிய சம்பாத்தியம் செய்வீர்கள். மற்றும் இன்றைய க்ரஹா நிலை படி வீட்டில் இருக்க பிடிக்காது,
எல்லோரையும் கடிந்து பேசுவீர்கள், அவர்கள் உங்களிடம் வருத்தம் அடைவார்கள். வெளியூர் சென்று விடலாமா என தோன்றும். நீங்கள் கடவுளை கூட வெறுப்பிர்கள். இந்த நிகழ்வுகள் உங்கள் ராசிப்படி வரக்கூடியதே. இதை தவிர்க்க உங்கள் குருவை அடிக்கடி சந்தித்து பேசி வரவும். பிள்ளையார் கோயில் பக்கம் போகும் பொது கோபுரத்தை சும்மா ஒரே ஒரு பார்வை மட்டும் பார்க்கவும். இந்த பிரச்சனை இந்த வருடத்திற்குள் மறைந்து விடும்.

அன்புடன்,

எம். பாலசுப்ரமணியன்,எம். .,
ஜோதிடர் & நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்,
VELLORE-632002 cell: 9443540743.
 
 

 

சனி, 16 பிப்ரவரி, 2013

லக்னாதிபதி நீச்சமா? (கேள்வி-பதில்-1)



ஜோதிட கேள்வி பதில்  -  16-2-2013     

லக்னாதிபதி நீச்சமா?
மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்!!! ஜோதிட சம்பந்தமான ஒரு பொது கேள்வி இது.. பொதுவாக பிறந்த ஜாதகத்தில் லக்னாதிபதி தான் உயிர் என்று கூறுகிறீர்கள், அப்படிப்பட்ட லக்னாதிபதி நீச்சமடைந்தால் அந்த ஜாதகருக்கு வாழ்க்கை நன்றாக இருக்காதா? உதரணத்திற்கு மிதுன லக்னாதிபதி புதன் மீனத்தில் நீச்சமடைந்தால் அந்த ஜாதகருக்கு வாழ்க்கை போராட்டமா? என் சந்தேகத்திற்கு அறிவுரை கூற வேண்டுகிறேன்...

நன்றி
ஷ்யாம்


அய்யா ,
உங்கள் கேள்வி ஒரு நல்ல கேள்வி. எல்லோரும் கேட்க கூடிய ஒன்றே. லக்னாதி பதி நீசம் பெற்றதாலே அவர் வாழ்க்கை பொய் விட்டது என்று இல்லை. அவர் நீச பங்கம் பெறலாம். அவர் நின்ற ராசி அதிபதி பலம் பெற்று இருக்கலாம். அவர் நின்ற நட்சத்ர அதிபதி பலம் பெற்று இருக்கலாம். லக்னத்தை அல்லது லக்னாதி பதி யை சுப கிரகம் பார்க்கலாம். லக்னம் கெட்டாலும் லக்னத்தில் உள்ளவர் பலம் பெறலாம். லக்னம் போனாலும் பூர்வ புன்யாதி பதி அல்லது பக்கியாதி பலம் பெறலாம். ஆக இப்படி பல விதமான சோதனைகளை செய்த பிறகே அவரது வாழ்க்கை கெட்டு விட்டதா என்று கூற முடியும். முடிவாக ஜாதக ரீதியில் அவர் வாழ்க்கை கெட்டே போய் இருந்தால் இருக்கவே இருக்கிறது கடவுள் துணை.

.


எம். பாலசுப்ரமணியன்,எம். .,

 ஜோதிடர் & நிறுவனர்,

Vellore Astrology Researchers Association,

வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்,

VELLORE-632002 cell: 9443540743.

வேலூர் - 632002 செல் 9443540743


    



ஆபத்து பாகைகள் - புத்தக வெளியீட்டு விழா

"ஆபத்து பாகைகள்" 

புத்தக வெளியீட்டு விழா




















 
 

























 



Add caption