மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 10 ஜனவரி, 2013

சனி தருவது சங்கடமா..? சந்தோஷமா..?

சனி தருவது 
சங்கடமா..?  சந்தோஷமா..?



               சனி நியாயமான கிரகம் என்று சொல்லும் போதே நமக்கு தெரியும், நாம் சனி கிரகத்தால் சங்கடம் அடைவோமா? அல்லது சந்தோஷம் அடைவோமா?. ஆம், நாம் நமக்கு தெரிந்து நமது வாழ்க்கையில் நேர்மையாக  நடந்தால்  சந்தோஷம் பெறுவது உறுதி. மாறாக நியாயமற்று , வெளியில் தர்ம சீலன் போன்றும், சிபி சக்கரவர்த்தியின் தம்பி போலும், எதிலும் அதிக ஆசை இல்லாதவர் போலும் நியாயத்தின்  சின்னமான தராசை எப்போதும் கையில் வைத்து இருப்பவன் போல் இருப்பவன், தனக்கு என்று வந்து விட்டால் "ஊருக்கு தான் உபதேசம், உனக்கும் எனக்கும் இல்லை" என்று இருப்பவர்களை நாம் அன்றாடம் வாழ்வில் சந்தித்து கொண்டு தான் இருக்கிறோம். இவர்கள் நல்ல படி சிறப்பாக வாழ்வது போல் சில வருடங்களுக்கு தெரியும், ஆனால் எப்படியும் 30 வருடங்களுக்குள் அவர்கள் தவறு செய்து இருந்தால் அதற்குறிய தண்டனையை கண்டிப்பாக அனுபவிப்பதும் கண்கூடு.

             ஜென்ம ஜாதகத்தில் சனி மட்டுமே நியாயமானவன். செய்தது நல்லது என்றால் நிச்சயம் அதற்குறிய நற்கூலியை நமக்கு தருவார்.            சனி கிரகம் தனது தசா புக்தியை அவரவர் ஜென்ம லக்னங்களுக்கு தகுந்தார் போல் பலன் செய்கிறார். சனி பகவான் கோச்சார பலன்களை எல்லா ராசியினருக்கும் சமமாகவே  தருகிறார். இதில், மென்மையாக   வாழ்ந்தவர்களுக்கு இவர் தரும் தீய பலன்களை கண்டு கண்ணீ ர்  விடுகிறார்கள்.  

             பொதுவாக சனி மற்றும் செவ்வாய் ராசி அதிபதிகளாக அமைய பெற்ற ராசிக்காரர்கள் கஷ்டத்தை தாங்கும் வல்லமை உள்ளவர்களாக இருக்கிறார்கள். மற்ற ராசியினர் கஷ்டத்தை கண்டு கவலைகிடமாகின்றனர். குறிப்பாக கடக சிம்ம ராசிக்காரர்கள் சொல்லவே வேண்டாம். ஆக மிகவும் எளிதில்  புண்படகூடிய  நபர்கள் சனியின் தாக்கத்தை தாங்க முடியாதவர்கள்.

            ஜென்ம ஜாதகத்தில் 3-6-10-11 இல் சனி இருப்பவர்களுக்கும், குரு பார்வையில் சனி இருக்கும் ஜாதகத்தினருக்கும் சனி பகவான் சந்தோஷமான செயதிகளை அவ்வப்போது  தந்து கொண்டே இருக்கிறார். லக்னத்தில் செவ்வாய், சூரியன், சனி, ராகு, கேது இருப்பவர்கள் கோச்சார சனி செய்யும் கொடுமைகளை தாங்கும் மன பக்குவம் உள்ளவர்கள்.

2 கருத்துகள்: